இலங்கைக்கு அடுத்த மாதம் கிடைக்கும் ஒரு மில்லியன் தடுப்பூசிகள்
உலக சுகாதார அமைப்பின் "கோவாக்ஸ்" வசதி மூலம் இலங்கைக்கு அடுத்த மாதம் ஒரு மில்லியன் குப்பிகள் மொடர்னா கோவிட் -19 தடுப்பூசிகள் கிடைக்கும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
இதற்கான உறுதிப்படுத்தல் நேற்று மாலை கிடைத்ததாக, உற்பத்தி மற்றும் மருந்து ஒழுங்குமுறை அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜெயசுமன தெரிவித்துள்ளார்.
மொடர்னா, தடுப்பூசி அமெரிக்காவின் பயோமெடிக்கல் மேம்பட்ட ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆணையம் ஆகியவற்றின் தயாரிப்பாகும்.
இந்த மொடர்னா தடுப்பூசி கிடைத்ததும், அவசரகால பயன்பாட்டிற்காக உலக சுகாதார நிறுவனத்தினால் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து உலகளாவிய தடுப்பூசிகளையும் பெற்ற நாடாக இலங்கை அமையும்.
உலகளாவிய தடுப்பூசி ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக இந்த தடுப்பூசி அளவை அமெரிக்கா கோவாக்ஸ் மூலம் அனுப்புவதாக அமைச்சர் கூறியுள்ளார்.
இதேவேளை இலங்கைக்கு நேரடி நன்கொடையாக அமெரிக்காவிலிருந்து மற்றொரு தடுப்பூசி தொகுதி கிடைக்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.





ஈழத் தமிழர் விடுதலைக்கு வழி என்ன..! யார் முன்வருவர்.. 15 மணி நேரம் முன்

ரோஹினி, க்ரிஷ் மாற்றி மாற்றி சொன்ன விஷயம், சந்தேகத்தில் முத்து-மீனா, அப்படி என்ன நடந்தது... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
