இதுவரையான காலப்பகுதிக்குள் ஒரு மில்லியனை அண்மித்த சுற்றுலாப் பயணிகள் வருகை
நடப்பு ஆண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் ஒரு மில்லியனை அண்மித்த சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
இந்த வருடத்தின் ஜனவரி முதலாம் திகதி முதல் மே 24ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் 990,032 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக புள்ளிவிபரங்கள் வெளியாகியுள்ளது.
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை குறித்த புள்ளிவிபரங்களை வெளியிட்டுள்ளது.
இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளில் பெரும்பாலானோர் இந்தியப் பிரஜைகளாவர் என்பதுடன், அந்த எண்ணிக்கை 236,916 ஆகும்.

மேலும் பிரித்தானியா, ரஷ்யா, ஜெர்மனி மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளிலிருந்தும் அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
மே மாதம் முதலாம் திகதி முதல் 24ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் மாத்திரம் 113,755 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
[ONKSVJV
கடும் நஷ்டத்தை நோக்கி ஜேசன் சஞ்சய் இயக்கிய சிக்மா படம்... இதுவரை எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா? Cineulagam
அவுஸ்திரேலியாவை விட்டு சிங்கப்பூருக்கு இடம்பெயர்ந்த தொழிலதிபர்: அவர் வைத்த குற்றச்சாட்டு News Lankasri