மாத்தறை சிறைச்சாலையில் மேலும் ஒரு கைதிக்கு மூளைக்காய்ச்சல்
மாத்தறை சிறைச்சாலையில் மேலும் ஒரு கைதிக்கு மூளைக்காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் பணிப்பாளர் ஹேமந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.
அண்மையில் திடீரென சுகவீனமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட கைதிகளின் உயிரியல் மாதிரிகள் பொரளை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்ட நிலையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
மக்கள் அச்சமடையத் தேவையில்லை
“மாத்தறை சிறைச்சாலை கைதிகளில் ஒருவருக்கு மாத்திரம் மூளைக்காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக குறித்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கைதி ஒருவர் இறந்துள்ளார் என்று செய்திகள் வெளியாகியிருந்தன.
இந்நிலையில், கைதிகளிடையே பரவி வரும் மூளைக்காய்ச்சல் குறித்து பொது மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை.” என்றார்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





திருமண மண்டபத்தில் ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம் வெளிவந்தது.. ஷாக்கில் குடும்பம், சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam

தயவுசெய்து இந்த சீரியலை முடித்துவிடுங்கள், கதறும் சன் டிவி சீரியல் ரசிகர்கள்... அப்படி என்ன தொடர் Cineulagam

10 திருமணம், 350 துணைவியர்..! மனைவிகளுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை: யார் இந்த இந்திய மன்னர்? News Lankasri
