வவுணதீவு வயல் பிரதேசத்தில் சடலமாக மீட்கப்பட்ட உழவு இயந்திர சாரதி
வவுணதீவு - பாவக்கொடிச்சேனை வயல் பிரதேசத்தில் உழவு இயந்திரம் ஒன்று தடம்புரண்ட நிலையில் அதன் சாரதி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் இன்று (21) காலை இடம்பெற்றுள்ளதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சடலமாக மீட்கப்பட்டவர்
பாவக்கொடிச்சேனையைச் சேர்ந்த 51 வயதுடைய முத்துப்பிள்ளை கருணாநிதி என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர் நேற்று பழங்குடியிருப்பு மடு பிரதேசத்திலுள்ள வயல் ஒன்றை உழுது பயன்படுத்துவதற்காக உழவு இயந்திரத்துடன் வீட்டிலிருந்து சென்றுள்ளார்.
இந்த நிலையில் இரவாகியும் வீடு திரும்பாததால் இன்று காலையில் அவரை தேடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட போது அவர் சடலமாக கிடப்பது தெரியவந்துள்ளது.
பொலிஸார் நடவடிக்கை
சம்பவம் தொடர்பில் தகவல் வழங்கப்பட்ட நிலையில் அங்க விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைப்பதற்கு நீதிமன்ற அனுமதியை பெறும் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுணதீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





