நாட்டின் பல்வேறு பகுதிகளில் அடைமழை - கொழும்பில் பல வீதிகளில் போக்குவரத்து நெரிசல்
கொழும்பில் பல வீதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பில் பெய்து வரும் கனமழையால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த நிலையில் நிலவும் மோசமான வானிலை காரணமாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் 11 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கைகளை விடுத்துள்ளது.
போக்குவரத்து நெரிசல்
இந்த மாவட்டங்கள் பதுளை, களுத்துறை, கொழும்பு, காலி, கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை, மாத்தறை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகியவை ஆகும்.
இதேவேளை, இலங்கைக்கு கிழக்கு பகுதியில் விருத்தியடைந்த கீழ் வளிமண்டல தளம்பல் நிலை ஏற்பட்டுள்ளதாக வளிமண்டவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
பலத்த மழைவீழ்ச்சி
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிற்பகல் வேளையின் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், தென் மற்றும் வடக்கு மாகாணங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக திணைக்களம் விடுத்துள்ள வானிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.




