நாட்டில் 43 லட்சம் குடும்பங்கள் அஸ்வெசும கோருகின்றனர்
இலங்கையின் மொத்த குடும்பங்களின் எண்ணிக்கை 52 லட்சம் எனவும் இதில் 43 லட்சம் குடும்பங்கள் அஸ்வெசும நலன்புரித் திட்டத்தை பெற்றுக்காள்ள விண்ணப்பம் செய்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
அமைச்சர் உபாலி பன்னல இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
பெரும் நெருக்கடிகளை உருவாக்கக்கூடும்
கடந்த 2024ம் ஆண்டில் குடிசன மதிப்பீட்டுத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கயின் பிரகாரம் நாட்டில் 52 லட்சம் குடும்பங்கள் வாழ்ந்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
இதில் 43 லட்சம் குடும்பங்கள் அஸ்வெசும நலன்புரித் திட்டத்திற்காக விண்ணப்பம் செய்துள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் பெரும்பாலனவர்கள் உதவிகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற மனநிலையில் வாழ்ந்து வருவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலைமையானது நாட்டின் பொருளாதாரத்தை மட்டுமன்றி மக்களின் உளச் சுகாதாரத்தையும் பாதிக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசியலில் நிலவி வந்த ஓர் கலாச்சாரமும் இவ்வாறு மக்கள் உதவி பெறும் நிலைக்கு தள்ளப்படுவதற்கான ஏதுவாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
மக்கள் மற்றும் அரசியல்வாதிகளினால் உருவாக்கப்பட்டுள்ள இந்த நிலைமைக்கு தீா்வு காணப்படாவிட்டால் அது இலங்கையை முன்னோக்கி நகர்த்துவதில் பெரும் நெருக்கடிகளை உருவாக்கக்கூடும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.




