குடும்ப பிரச்சினைகள் தொடர்பில் வருடமொன்றுக்கு ஒரு லட்சம் முறைப்பாடுகள்
குடும்ப பிரச்சினைகள் தொடர்பில் வருடமொன்றுக்கு ஒரு லட்சம் முறைப்பாடுகள் செய்யப்படுவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பொலிஸ் திணைக்களத்தின் சிறுவர் மற்றும் மகளிர் பிரிவிற்கு இவ்வாறு சுமார் ஒரு லட்சம் முறைப்பாடுகள் கிடைக்கப் பெறுவதாக அந்தப் பிரிவிற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரேணுகா ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
நாட்டில் சுமார் 600க்கும் மேற்பட்ட பொலிஸ் நிலையங்கள் இயங்கி வருவதுடன் இவை அனைத்திலுமே சிறுவர் மற்றும் மகளிர் பிரிவு காணப்படுகின்றது.
தகாத தொடர்புகள் குறித்தே அதிகளவில் முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மாமியார் மருமகள் பிரச்சினைகள், கணவன் போதைப் பொருளுக்கு அடிமையாதல் போன்ற சம்பவங்கள் தொடர்பிலும் கூடுதல் எண்ணிக்கையில் பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்யப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான குடும்ப பிணக்குகள் காரணமாக குடும்ப உறவுகளில் நாளுக்கு நாள் விரிசல் நிலை ஏற்படும் ஆபத்து உருவாகியுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சமூக ஊடக செயற்பாடுகள் காரணமாகவும் தற்போது குடும்ப பிணக்கு ஏற்படுவதற்கு பிரதான ஏதுவாக அமைந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.