உழவு இயந்திர விபத்தில் ஒருவர் உயிரிழப்பு - இருவர் படுகாயம்
மாத்தளையில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்து சம்பவம் இன்று (20.3.2024) மாத்தளை - வில்கமுவ எலவனாகந்த பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
விபத்து தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
உழவு இயந்திரங்கள் மோதி விபத்து
நெல் அறுவடை இயந்திரங்களை ஏற்றி சென்ற இரண்டு உழவு இயந்திரங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்தில் உழவு இயந்திரம் ஒன்றில் பயணித்த 26 வயதுடைய மேல் மலகஸ்வெவ புளியங்குளத்தை சேர்ந்தவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து எலவன மலை சரிவுப்பகுதியில் இடம்பெற்றுள்ளது. இயந்திர கோளாறு காரணமாகவே விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Bigg Boss 10: இரண்டாவது குறும்படத்தினை வெளியிட்ட விஜய் சேதுபதி... வாயடைத்துப்போன போட்டியாளர்கள் Manithan
ஏபி டிவில்லியர்ஸ் டக்அவுட்: 42 வயது வீரரின் சிக்ஸர்மழை..தென் ஆப்பிரிக்கா சாம்பியன்ஸ் வெற்றி News Lankasri