திருகோணமலையில் விபத்து: ஒருவர் உயிரிழப்பு(Photos)
திருகோணமலை-புல்மோட்டை பிரதான வீதி சலப்பையாறு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 46 வயதுடைய நபரொருவர் உயிரிழந்துள்ளார். இவ்விபத்து இன்று (05.11.2022) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
ஒருவர் உயிரிழப்பு

பொலன்னறுவையிலிருந்து ஹாட்வயார் பொருட்களை ஏற்றி வந்த லொறி துவிச்சக்கரவண்டியில் பயணித்தவருடன் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் தெரிய வருகின்றது.
இவ்விபத்தின் போது சலப்பையாறு- இரணைக்கேணி இரண்டாம் வட்டாரத்தில் வசித்து வந்த கைலாயபிள்ளை பஞ்சலிங்கம் (46வயது) என்பவரே உயிரிழந்துள்ளதாகவும் தெரிய வருகின்றது.
குச்சவெளி பிரதேச வைத்தியசாலை

உயிரிழந்தவரின் சடலம் தற்பொழுது குச்சவெளி பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இவ்விபத்துடன் தொடர்புடைய சாரதியை கைது செய்துள்ளதுடன் விபத்து தொடர்பிலான
விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக குச்சவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Bigg Boss 10: பிக்பாஸ் வீட்டிற்குள் போன் செய்த விஜய் சேதுபதி! மாட்டிக் கொண்ட குழந்தை முக கொலைகாரி Manithan
Bigg Boss 10: முனியம்மாவின் 200 கிலோ சிக்கன் Luxury Purchases.... விஜய் சேதுபதி கேட்ட கேள்வி Manithan