கட்டுப்பாட்டை இழந்த கார் - வீதியோரமாக நின்ற நபருக்கு நேர்ந்த கதி
சிலாபம் - ஆராச்சிகட்டுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செங்கல்ஓயா பாலத்துக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து நேற்று(21.06.2026) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மடு தேவாலயத்துக்குச் சென்று வழிபாடுகளை முடித்துக் கொண்டு, மீண்டும் வென்னப்புவ பகுதியை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த கார் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
கார் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
காரைச் செலுத்திச் சென்ற சாரதிக்கு ஏற்பட்ட திடீர் நித்திரைக் கலக்கம் காரணமாக, கட்டுப்பாட்டை இழந்த கார் வீதியோரத்தில் இருந்த சிறிய ரக வியாபார நிலையம் ஒன்றுக்குள் புகுந்துள்ளது.

இதன்போது, அங்கு நின்றுக் கொண்டிருந்த நபர் ஒருவர் மீது கார் பலமாக மோதியதில், அவர் அந்த இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து மற்றும் உயிரிழந்த நபரின் விவரங்கள் குறித்த மேலதிக விசாரணைகளை ஆராச்சிகட்டுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.