ஒன்றாரியோவில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி ஒருவர் பலி
கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தின் தென்மேற்கு மிடில்செக்ஸ் நகரில் உள்ள மெல்பேர்ன் வீதியில் வீடொன்றில் ஏற்பட்டுள்ள தீ விபத்து குறித்து பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
செவ்வாய் கிழமை முற்பகல் 10.20 அளவில் தீ விபத்து குறித்து தீயணைப்பு படையினருக்கு தகவல் கிடைத்துள்ளதுடன்,தீ காரணமாக உயிரிழந்த ஒருவரது உடலையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
இதன்போது உயிரிழந்தவர் தொடர்பில் அடையாளம் கண்டறியப்படாத நிலையில்,மரணமடைந்தவரின் உறவினர்களுக்கான அறிவிப்பும் இன்னும் நிலுவையில் உள்ளது.
பொலிஸாரின் விசாரணைகளுக்கு மிடில்செக்ஸ் தீயணைப்பு படை அலுவலகத்தினர் உதவி வருகின்றனர்.
சம்பவம் தொடர்பான புதிய தகவல்கள் கிடைக்கும் போது அவை ஊடகங்களுக்கு வழங்கப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
28 ஆண்டுகள், 29 நாடுகள், 50,000 கி.மீ நடைபயணம்- பிரித்தானியாவிற்கு திரும்பிய சாகச வீரர் News Lankasri
தெறிக்கும் மண்டாடி பட வசூல் வேட்டை... நடிகர் சூரி ரசிகர்களுக்கு வெளியிட்ட இன்ப அதிர்ச்சியான தகவல் Cineulagam
காலையில் வெறும் வயிற்றில் 2 பேரீச்சம்பழங்கள் - உடலில் நடக்கும் மாற்றங்கள் என்னென்ன தெரியுமா? Manithan
ரூ.17.5 கோடி வீட்டின் பால்கனியில் விவசாயம் செய்யும் நடிகர் மாதவன் - நீங்களும் செய்ய 5 எளிய வழிகள் இதோ! Manithan
ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் டிரம்பின் தங்க நிர்வாண சிலை: எழுதப்பட்டிருந்த சர்ச்சைக்குரிய வாசகம் News Lankasri