இலங்கையில் பதிவான மற்றுமொரு கொடூர படுகொலை
மிரிஹான பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்வல வீதிப் பகுதியில் நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தினால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இன்று(23.04.2023) அதிகாலை இந்த படுகொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், இதன்போது மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகி்ன்றது.
அதே பகுதியைச் சேர்ந்த சஜித் மதுசங்க என்ற நபரே பலத்த காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார். காயமடைந்தவர் தெனியாய பகுதியைச் சேர்ந்த 53 வயதுடையவர் எனவும் உயிரிழந்தவரின் உறவினர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸாரின் நடவடிக்கை
குற்றச் செயலின் பின்னர் சந்தேகநபர் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாகவும், சந்தேக நபர் உயிரிழந்தவரின் உறவினர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தநிலையில், இரு தரப்பினருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக இந்த கத்திக் குத்து இடம்பெற்றுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதுடன், சந்தேக நபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
இதேவேளை, நாட்டில் கடந்த சில நாட்களாக தொடர் படுகொலைச் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.