இராணுவ அதிகாரியின் வாகனம் மோதி ஒருவர் பலி
மோட்டார் வாகனம் ஒன்று வீதியை விட்டு விலகி மரக்கறி கடை ஒன்றில் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் மாவனல்லை ஹிங்குல பிரதேசத்தில் நேற்று(02.11.2023) இடம்பெற்றுள்ளது.
குறித்த வாகனத்தை ஓய்வுபெற்ற இராணுவ மேஜர் ஜெனரல் ஒருவரே செலுத்தியுள்ளார் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
விசாரணை பின்னனி
சம்பவத்தில் படுகாயமடைந்த நபர், மாவனல்லை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
விபத்தில் உயிரிழந்தவர் மாவனல்லை, ஹிங்குல பிரதேசத்தில் வசிக்கும் 34 வயதுடைய திருமணமானவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மோட்டார் வாகனம் கொழும்பிலிருந்து கண்டி நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது சாரதியால் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் வீதியை விட்டு விலகி காய்கறி கடையை மோதி பலத்த சேதத்தை விளைவித்ததுடன் அருகிலிருந்த தொலைபேசிக் கம்பத்திலும் மோதியுள்ளது என பொலிஸ் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், உயிரிழந்தவரின் சடலம் மாவனல்லை ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 5 மணி நேரம் முன்
முருகன் பிறந்த இடம் வடநாடா? கொந்தளித்த தமிழ் மக்கள்.. ஜூனியர் என்.டி.ஆர் படத்திற்கு எதிர்ப்பு.. Cineulagam
'காதல் சொல்ல வந்தேன்' நடிகரின் தற்போதைய நிலை... வெளிநாட்டில் என்ன வேலை செய்றார்னு தெரியுமா? Manithan