கிளிநொச்சியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு குடும்பஸ்தர் கொலை
செய்யப்பட்டுள்ளதுடன் மேலும் மூவர் காயமடைந்துள்ளனர் இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. 32 வயதுடைய குடும்பஸ்தலர் ஒருவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கிளிநொச்சி பிரமந்தனாறு பகுதியில் பாடசாலையில் நேற்று பிற்பகல் (04-04-2024) விளையாட்டு போட்டி நடைபெறுவதற்கு ஏற்பாடாக இருந்த நிலையில் பாடசாலையில் வைத்து இரு குழுக்களிடையே ஏற்பட்ட பிரச்சனை ஒன்றின் விளைவாக இரண்டு தரப்புகளுக்கு இடையில் பாடசாலை வளாகத்தில் வாய் தர்கம் ஏற்பட்டது.
இதனையடுத்து பாடசாலை நிர்வாகம் இருதரப்புக்களையும் சமரசம் செய்து பாடசாலை வளாகத்தை விட்டு அனுப்பியிருந்தது.
இதன் பின்னர் மீளவும் குறித்த இரண்டு தரப்பினரும் புன்னைநிராவி பிள்ளையார் ஆலய சந்தி பகுதியில் வாய் தர்க்கத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இது தொடர்பில் பிரதேச மக்களால் ஏற்கனவே பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு சென்ற தரும்புரம் பொலிஸார் இருவரை கைது செய்து பின்னர் அவர்களை மீளவும்இறக்கி விட்டு சிறிது தூரம் சென்றபின்னரே இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பொலிஸாரின் பக்க சார்பான செயற்பாடு
கத்திக்குத்துக்கு தாக்குதல் இலக்காகியவர் வைத்தியசாலை கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளதுடன் குறித்த சம்பவத்தில் மேலும் மூவர் காயமடைந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின்பேரில் தர்மபுரம் பொலிஸாரால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை பாடசாலை இல்ல விளையாட்டுப் போட்டிக்கு தரும்புரம் பொலிஸாரை அழைத்திருந்த போதும் பாடசாலைக்கு அவர்கள் சமூகம் அளித்திருக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
பொலிஸாரின் பக்க சார்பான செயற்பாடும் தூண்டுதலுமே இக்கொலைக்கான காரணம் எனவும் பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கிடைக்குமா! 9 மணி நேரம் முன்

பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவு... செயல்பாடுகளை நிறுத்தும் பெரும் தொழில்நுட்ப நிறுவனம் News Lankasri
