யானையின் தாக்குதலுக்கு இலக்காகி இளைஞரொருவர் உயிரிழப்பு
வவுனியாவில் இருந்து திருகோணமலை நோக்கி வந்துகொண்டிருந்த இளைஞரொருவர் யானை தாக்கி உயிரிழந்துள்ளதாக கெப்பித்திகொள்ளாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் இன்று (19) மாலை இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் திருகோணமலை பகுதியைச் சேர்ந்த சிவபால சுந்தரம் மயூரன் (33 வயது) எனவும் தெரியவருகின்றது.
கொழும்பில் 69வது தேசிய பூப்பந்தாட்ட விளையாட்டு நிகழ்வு நடைபெற்று வருகின்ற நிலையில் இவர் நடுவராக கடமையாற்றி வந்துள்ளார்.
கொழும்பில் இருந்து வவுனியா நோக்கி ரயிலில் வருகை தந்து மீண்டும் மோட்டார் சைக்கிளில் திருகோணமலை நோக்கி சென்று கொண்டிருந்த போது யானை வீதியால் கடக்க முற்பட்டபோது தாக்கியதாகவும் தெரியவருகின்றது.
இவ்வாறு உயிரிழந்த இளைஞரின் சடலம் சம்பவ இடத்தில் வைக்கப்பட்டுள்ளதுடன்,மேலதிக விசாரணைகளை கெப்பித்திக்கொள்ளாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 8 மணி நேரம் முன்
முருகன் பிறந்த இடம் வடநாடா? கொந்தளித்த தமிழ் மக்கள்.. ஜூனியர் என்.டி.ஆர் படத்திற்கு எதிர்ப்பு.. Cineulagam