கொழும்பு புறநகரில் நடந்த கோர விபத்து! பெண் ஒருவர் கைது
பிலியந்தலை பொகுந்தர பிரதேசத்தில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் பொரலஸ்கமுவ, வெரஹெர பகுதியைச் சேர்ந்த 52 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த நபர் பிலியந்தலையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த சொகுசு ஜீப் வண்டியுடன் மோதியதில் உயிரிழந்துள்ளார்.
விபத்தின் போது ஜீப் வண்டியை ஓட்டிச் சென்ற பெண் சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். வீதியோரத்தில் பயணித்த நபரின் உடலில் ஜீப் மோதியதுடன் அருகில் உள்ள கடை ஒன்றின் மீது மோதி மீண்டும் நடுரோட்டில் நின்றுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த விபத்துடன் பிலியந்தலை முதல் கொழும்பு வரை கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது. நுகேகொட பிரதேசத்தை சேர்ந்த 53 வயதான சந்தேகநபர் இன்று கெஸ்பேவ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.



