கொழும்பில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் படுகொலை
கொழும்பு (Colombo) தலங்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அருப்பிட்டிய பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று (19.08.2024) ஞாயிற்றுக்கிழமை முச்சக்கரவண்டிகளை பழுது பார்க்கும் இடமொன்றில் இடம்பெற்றுள்ளது.
45 வயதுடைய முச்சக்கரவண்டி சாரதியே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதோடு சம்பவம் தொடர்பில் 31 வயதுடைய சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகள்
கொலை செய்யப்பட்டவர் கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் இருந்து கடனாகப் பணத்தைப் பெற்றுக்கொண்டுள்ளார்.
இந்நிலையில், கொலை செய்யப்பட்டவர் கைது செய்யப்பட்ட சந்தேகநபருக்கு அந்தப் பணத்தைத் திருப்பித் தராததால் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்த வாக்குவாதம் எல்லை மீறியதால் இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது என்று பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தலங்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

இந்த வாரம் ஓடிடி-யில் ரிலீஸாகும் எதிர்பார்ப்புக்குரிய இரண்டு படங்கள்.. Week end என்ஜாய் பண்ணுங்க Cineulagam

மலிவான வட்டி விகிதத்தில் ரூ.20 லட்சம் வரை கடன் வழங்கும் இந்திய அரசு.., எந்தெந்த வங்கிகள் தெரியுமா? News Lankasri
