குழுவொன்றினால் நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவர் பலி: பளையில் சம்பவம்
கிளிநொச்சி - பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முகமாலை பிரதேசத்தில் குழுவொன்றினால் நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இத்தாக்குதல் கடந்த 31ஆம் திகதி இடம்பெற்றதாகவும், பலத்த காயமடைந்த நபர், யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று (03.09.2023) பிற்பகல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொடிகாமம் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணை
தனிப்பட்ட தகராறு காரணமாக உயிரிழந்தவரின் சகோதரியின் கணவர் உள்ளிட்ட குழுவினரே இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.
கொலையுடன் தொடர்புடைய இருவர் பளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், சந்தேகநபர்கள் 34 மற்றும் 31 வயதுடைய பளை மற்றும் அரியாலை பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஏனைய சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றதக தெரிவிக்கப்படுகிறது.
மேலதிக தகவல் - கஜீ





ரஷ்ய நிலநடுக்கத்தின் எதிரொலி! பாறை சரிவிலிருந்து கடல் சிங்கங்கள் தப்பிக்கும் திகில் காட்சி! News Lankasri

ப்ரீ புக்கிங்கில் மாஸ் காட்டும் ரஜினியின் கூலி.. இதுவரை செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam

சுனாமி அலைகளுக்கு மத்தியில் கப்பலுக்கு ஓடிய மக்கள்: பெண் சுற்றுலா பயணி பகிர்ந்த திக் திக் நிமிடங்கள்! News Lankasri
