யாழில் விபத்தில் ஒருவர் பரிதாபமாக பலி! மின் தடையால் வந்த வினை
யாழ்ப்பாணம் நல்லூரில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் வங்கி ஒன்றின் கன்னாதிட்டிக் கிளை உதவி முகாமையாளர் உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டையிழந்து வீதியைவிட்டு விலகி மதிலுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
மின்தடை காரணமாக வீதியில் இருள் சூழ்ந்திருந்ததால் அவரை அவசரமாக மீட்டு வைத்தியசாலையில் அனுமதிக்க முடியாமல் போனதால் அதிக குருதிப்போக்கால் உயிரிழந்துள்ளார் என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.
இந்தச் சம்பவம் இன்று இரவு 8.45 மணியளவில் நல்லூர் வீரமாகாளி அம்மன் வீதியில் இடம்பெற்றது.
சம்பவத்தில் பருத்தித்துறையைச் சேர்ந்தவரும் நல்லூரில் வசிக்கும் சிறிஸ்கந்தராஜா பகீரதன் (வயது-40) என்ற 3 பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
தாலி கட்டுறேனு சொல்லி 1000 முத்தங்கள்.. பிக்பாஸ் முத்துக்குமரன் மீது பெண் பரபரப்பு குற்றச்சாட்டு! Manithan
ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் டிரம்பின் தங்க நிர்வாண சிலை: எழுதப்பட்டிருந்த சர்ச்சைக்குரிய வாசகம் News Lankasri