திருகோணமலையில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் காயம் (Photos)
திருகோணமலை - ஹொரவ்பொத்தான பகுதியில் காரும், மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ்விபத்து இன்று (07.10.2023 ) 11.30 மணியளவில் ஹொரவ்பொத்தான பிரதான வீதி மிகிந்தபுர பகுதியில் இடம் பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிள் திருமலையில் இருந்து கன்னியா நோக்கி சென்றுள்ளதாகவும், சம்பாலேன் உள் வீதியிலிருந்து பிரதான வீதிக்கு வந்து கொண்டிருந்த சொகுசு காருடன் மோதி விபத்துக்குள்ளானதாகவும் தெரிய வருகின்றது.
பொலிஸார் விசாரணை
இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த கன்னியா மாங்காயூற்று பகுதியைச் சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க நபரொருவர் காயமடைந்துள்ளதாகவும் தெரிய வருகின்றது.
விபத்து தொடர்பிலான விசாரணைகளை உப்புவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கூச்சலிட்டு குழப்பம் விளைவிக்கும் அம்பிட்டிய சுமன தேரர்! மட்டக்களப்பில் பொலிஸார் தேரர்களுக்கிடையே பதற்றம் (Video)
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 1ம் நாள் - மாலை திருவிழா





10 திருமணம், 350 துணைவியர்..! மனைவிகளுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை: யார் இந்த இந்திய மன்னர்? News Lankasri

திருமண மண்டபத்தில் ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம் வெளிவந்தது.. ஷாக்கில் குடும்பம், சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam
