யாழில் விசேட அதிரடிப்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூடு! ஒருவர் படுகாயம்
யாழ்ப்பாணம் - அரியாலை நெளுக்குளம் பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அரியாலை, நெளுக்குளம் பகுதியில் உழவு இயந்திரத்தில் மணல் கடத்தலில் ஈடுபட்டோரை சிறப்பு அதிரடிப்படையினர் மறித்த போதும் நிறுத்தாமல் சென்றமையினாலேயே இவ்வாறு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவத்தில் உழவு இயந்திரத்தில் பயணித்த ஒருவர் படுகாயமடைந்துள்ள நிலையில், அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தில் அரியாலை முள்ளியைச் சேர்ந்த 27 வயதுடைய யசிந்தன் என்பவர் காயமடைந்த நிலையில், அவர் பொலிஸ் காவலில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இதன்போது மணல் ஏற்றிச்சென்ற உழவு இயந்திரம் பொலிஸாரினால்
மீட்கப்பட்டுள்ளது.
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 15 மணி நேரம் முன்
புகலிடக்கோரிக்கையாளர்கள் 10,000 பவுண்டுகள் செலுத்தவேண்டும்... அறிமுகமாகும் புதிய சட்டம் News Lankasri