மதுபோதையில் ஏற்பட்ட சண்டை! ஒருவர் காயம் : வீடு ஒன்று தீக்கிரை(Video)
மட்டக்களப்பு - கொக்குவில் பொலிஸ் பிரிவிலுள்ள பாலைமீன்மடு 50 வீட்டுத் திட்டத்தில் இரு குழுக்களுக்கிடையில் மது போதையில் ஏற்பட்ட சண்டையில் ஒருவர் படுகாயமடைந்ததுடன், வீடு ஒன்று தீக்கிரையாக்கப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கொக்குவில் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று(02) அதிகாலையில் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் தெரிவிக்கையில்,
குறித்த பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்டுவரும் இருகுழுவினரும் நேற்று (01) ஒன்றாக மதுபானம் அருந்தியுள்ள நிலையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் சண்டையாக மாறியுள்ளது.
அதனையடுத்து 119 பொலிஸ் அவசர சேவை இலக்கத்துக்குக் கிடைத்த தகவலுக்கமைய பொலிஸார் சம்பவ இடத்துக்குச் சென்றதையடுத்து இரு குழுவினரும் சமாதானமாகினர்.
இதில் காயமடைந்த ஒருவரை வைத்தியசாலையில் அனுமதித்ததுடன், இருகுழுக்களையும் பொலிஸார் சண்டை போடக்கூடாது என எச்சரித்துச் சென்றனர்.
இந்த நிலையில் இந்த குழு ஒன்றுடன் தொடர்பு பட்ட நாகநாதன் நவநீதனின் குடும்பத்தினர் பயத்தில் அருகிலுள்ள வீட்டில் நேற்று இரவு சென்று தங்கியிருந்துள்ளனர்.
இதன்போது அவரின் வீட்டை இன்று அதிகாலையில் இனம் தெரியாத ஒருவர் தீயிட்டுள்ளதையடுத்து வீடு முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

காஷ்மீர் தாக்குதலில் திருமணமான 7 நாளில் உயிரிழந்த கணவர்.., தம்பதியினர் கடைசியாக எடுத்த வீடியோ வைரல் News Lankasri

தலைநகரில் இருந்து 600,000 மக்களை வெளியேற்றும் நேட்டோ உறுப்பு நாடு... புடினின் அடுத்த இலக்கு News Lankasri

மகாநதி சீரியலில் அடுத்து விஜய்க்கும், வெண்ணிலாவிற்கும் திருமணம் நடக்கப்போகிறதா?.. படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam

தனக்கு இப்படி நடந்தது எப்படி, அதனை கண்டுபிடித்த ஆனந்தி.. சிங்கப்பெண்ணே சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
