வவுனியாவில் விபத்து ஒருவர் படுகாயம்
வவுனியா குட்செட் வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த விபத்து சம்பவம் இன்று (14) காலை இடம்பெற்றுள்ளது.
வவுனியாவிலிருந்து குட்செட்வீதியில் சென்ற மோட்டார் சைக்கிளும், முச்சக்கர வண்டியும் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த திருகோணமலையை சேர்ந்த கேதீஸ்வரன் (வயது 41) என்பவரே படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணையினை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.