பொலிஸார் தாக்கியதாக கூறி கிளிநொச்சியில் ஒருவர் வைத்தியசாலையில் (VIDEO)
எரிபொருள் நிரப்புவதற்காக வாகனத்தைச் செலுத்திச் சென்ற சாரதி மீது இன்று பொலிஸார் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபட்டதாக தெரிவித்து கல்லாற்று பிரதான வீதியில் வைத்து தாக்கப்பட்டதாக தெரிவித்து சாரதியொருவர் தர்மபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பாக டிப்பர் வாகன உரிமையாளர் தெரிவிக்கையில், எரிபொருள் நிரப்புவதற்காகவே டிப்பர் வாகனம் தனது வீடு நோக்கி வந்ததாகவும், எனினும் வீதியில் சென்ற பொலிஸார் டிப்பரின் சாரதியை சரமாரியாக தாக்கியதாகவும் தெரிவித்துள்ளார்.
தாக்கிய பின்னர் பொலிஸார் வாகன சாரதியிடம் டிப்பரினை கொண்டு செல்லுமாறு தெரிவித்துள்ளதாகவும், டிப்பர் வாகன சாரதி தன்னால் இயலாத நிலையில் வைத்தியசாலைக்கு சென்று உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக பொலிஸார் கூறுகையில் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வு இடம்பெறுவதாக தமக்கு தகவல் கிடைக்கப்
பெற்றதையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற போது மணலைக் கொட்டி விட்டு டிப்பர்
தப்பிச் செல்ல முற்பட்டதாக கூறியுள்ளனர்.