ஒரே குடும்பத்தை சேர்ந்த பெற்றோர் மற்றும் பிள்ளைகள் உயிரை மாய்க்க முயற்சி
ரம்புக்கனையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உயிரை மாய்க்க முயற்சித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் இன்று காலை விஷம் அருந்திய நிலையில் மாவனல்லை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
28 வயதுடைய தந்தை, 27 வயதுடைய தாய் மற்றும் அவர்களது இரண்டு பிள்ளைகள் ஆகியோரே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பொலிஸார் சந்தேகம்
குறித்த தாய், தந்தை இருவரும் வீட்டில் இருந்த தமது இரண்டு பிள்ளைகளுக்கும் விஷம் கொடுத்துவிட்டு தாமும் அருந்தியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
நான்கு பேரும் வீட்டில் மயங்கிய நிலையில் கிடப்பதைக் அயலவர்கள் கண்டுள்ளனர். உடனடியாக மாவனல்லை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸார் விசாரணை
இரண்டு குழந்தைகளுக்கும் பெற்றோரே விஷம் கொடுத்தமைக்கான காரணம் இதுவரையில் தெரியவரவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





ஷார்ஜாவில் தூக்கில் தொங்கி இறந்த கேரள பெண்: இந்தியா திரும்பிய கணவர் விமான நிலையத்தில் கைது News Lankasri

மகேஷுக்கு விபத்து.. ஆனந்தி பற்றிய உண்மை தெரிந்ததா? சிங்கப்பெண்ணே சீரியல் அடுத்த வார ப்ரோமோ Cineulagam

உடல் உறையும் நிலையில் லொறிக்குள் சிக்கியிருந்த புலம்பெயர்ந்தோர்... சாரதியால் அம்பலமான கொடூரம் News Lankasri
