குளவி கொட்டுக்குள்ளானதில் ஒருவர் உயிரிழப்பு: மூவர் வைத்தியசாலையில்(Photos)
பொகவந்தலவை பிரதேசத்தில் குளவி கொட்டுக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பொகவந்தலாவை - மேல் பிரிவு தோட்ட பகுதியில் உள்ள 17ஆம் இலக்க வனப்பகுதியில் விறகு சேகரிக்க சென்ற 4 பேரே குளவி கொட்டுக்கு இலக்காகியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு மேலும் மூன்று பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றது என பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் பிரேத அறையில்
நால்வரும் 17 ஆம் இலக்க வனப்பகுதிக்கு விறகு சேகரிக்க சென்ற போது மரத்தில் இருந்த குளவி கூட்டினை கழுகு ஒன்று தாக்கியதில் குளவிகள் இவ்வாறு கலைந்து வந்து இவர்களை கொட்டியுள்ளது.
அதில் ஒருவர் கடுமையான தாக்குதலுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பொகவந்தலாவ - கீழ்ப் பிரிவு தோட்டத்தை சேர்ந்த 50 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான சிக்கன் பத்மநாதன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சடலம் பொகவந்தலாவை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
காயங்களுக்குள்ளான மூவரும் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பொலிஸார் விசாரணை
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
எரிபொருள் மோசடி! அதிகாரிகளின் அசமந்த போக்கால் கலவரத்தில் ஈடுப்பட்ட மக்கள்(Video) |
மேலதிக தகவல்: கிரிஷாந்தன்





உயிருக்கு பதில் உயிர்தான் வேண்டும்: கேரள செவிலியர் வழக்கில் ஏமன் குடும்பம் வலியுறுத்தல் News Lankasri
