வவுனியா வைத்தியசாலையில் விழுந்து ஒருவர் மரணம்! பரிசோதனையில் வெளியான தகவல்
வவுனியா வைத்தியசாலைக்கு காய்ச்சல் என சென்ற நபர் வைத்தியசாலையில் தனது பெயர் விபரங்களை பதிந்து கொண்டு இருந்த போதே விழுந்து மரணமடைந்துள்ளார்.
அவரிடம் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்று இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
காய்ச்சல் காரணமாக வவுனியா வைத்தியசாலை அருகில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றிற்கு மருந்து எடுப்பதற்காக நபர் ஒருவர் சென்றுள்ளார். அவரது உடல் நிலையை அவதானித்த தனியார் மருத்து மனையைச் சேர்ந்தவர்கள் குறித்த நபரை வவுனியா வைத்தியசாலைக்கு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
இதனையடுத்து அந்த நபர் வவுனியா வைத்தியசாலைக்கு சென்று அங்கு சிகிச்சை பெறுவதற்காக தனது பெயர் விபரங்களை பதிவு செய்து கொண்டிருந்த போதே கீழே விழுந்து மரணமடைந்துள்ளார்.
மரணமடைந்தவர் வவுனியா உக்குளாங்குளம் பகுதியைச் சேர்ந்த 55 வயது நபராவார். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஜனனி சொன்ன ஒரே ஒரு விஷயம், ஷாக்கான ஈஸ்வரி, கதிர் போடும் திட்டம்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
விஜய் ஆட்சி அமைப்பது குறித்து எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் இயக்குனர் திருச்செல்வம் பரபரப்பு வீடியோ... இதோ Cineulagam
அட சன் டிவி சீரியல் நடிகைகளா இவர்கள், எல்லோரும் எவ்வளவு அழகு பாருங்க... இதுவரை பார்க்காத போட்டோ Cineulagam