திருகோணமலை பேருந்து விபத்தில் சிக்கிய நபர் உயிரிழப்பு
திருகோணமலை - உட்துறைமுக வீதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் சிக்கிய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே குறித்த நபர் இன்று (05.01.2024) உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த நபர், கடந்த முதலாம் திகதி வீதியை கடக்க முற்பட்டபோது மூதூர் டிப்போவுக்கு சொந்தமான பேருந்துடன் மோதி, படுகாயமடைந்துள்ளார்.
பொலிஸார் விசாரணை
தொடர்ந்து, அவர் திருகோணமலை பொது வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டதையடுத்து சிகிச்சை பலனின்றி இன்றைய தினம் உயிரிழந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
சம்பவத்தில் உயிரிழந்தவர் திருகோணமலை கஸ்தூரி நகரை சேர்ந்த கருப்பையா கருணாநிதி (43 வயது) என தெரிவிக்கப்படுகின்றது.
அதேவேளை, உயிரிழந்தவரின் சடலம் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பொலிஸ் விசாரணையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.
விபத்து தொடர்பான விசாரணைகளை திருகோணமலை தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

950 ராணுவ வீரர்களின் உடல்களை மாற்றிக்கொண்ட ரஷ்யா, உக்ரைன்: ஒரே மாதத்தில் இரண்டாவது முறை News Lankasri
