மட்டக்களப்பில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பலி
மட்டக்களப்பு - ஆயித்தியமலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முள்ளாமுனைப் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று ஏற்பட்ட இந்த விபத்தில் (29.04.2025) சர்வோதைய நகர் கித்துள் பகுதியைச் சேர்ந்த நடராசா ரஜிக்காந் என்பவரே குறித்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.
சந்தேகநபர் தப்பியோட்டம்
ஆயித்தியமலை முள்ளாமுனை பிரதான வீதியால் மட்டக்களப்பு நோக்கிச் சென்றவேளை முள்ளாமுனை பகுதியில் எதிரே வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதுண்டதிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் குறித்த விபத்தை ஏற்படுத்தியவர் தப்பிச் சென்றுள்ளதாக ஆயித்தியமலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், மட்டக்களப்பு திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.நசீர் சடலத்தை பார்வையிட்டதுடன் ஆயித்தியமலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |