திருகோணமலையில் விபத்தில் இளைஞர் உயிரிழப்பு: மற்றுமொருவர் படுகாயம்
திருகோணமலை - குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சலப்பையாறு பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அதேவேளை, மற்றுமொரு நபர் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
குறித்த விபத்து சம்பவம் இன்று (21.10.2023) மாலை இடம்பெற்றுள்ளது.
உயிரிழப்பு
படுகாயமடைந்த நபர் வீதியோரத்தில் உட்கார்ந்திருந்திருந்த போது வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதியுள்ளது.
இதன்போது மோட்டார் சைக்கிளைச் செலுத்தி வந்த 17 வயதுடைய இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அந்த இளைஞரின் சடலம் குச்சவெளி பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
குச்சவெளி - நாவல்சோலை பகுதியைச் சேர்ந்த இளைஞரே உயிரிழந்துள்ளார்.
மேலதிக சிகிச்சை
விபத்தில் படுகாயமடைந்த மற்றைய நபர் (வீதியில் இருந்த நபர்) குச்சவெளி பிரதேச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காகத் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பான விசாரணைகளை குச்சவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ஜீ தமிழில் சரிகமப-டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சிகளின் மகா சங்கமம்... மேடையில் நடந்த எமோஷ்னல் சம்பவம் Cineulagam

இந்த மாதங்களில் பிறந்த ஆண்கள் திருமணத்தின் பின் கோடிஸ்வரயோகம் பெறுவார்களாம்! நீங்க எந்த மாதம்? Manithan
