கோர விபத்தில் பெண் ஒருவர் பலி - உயிருக்கு போராடும் 11 மாத குழந்தை
தங்காலை - மாத்தறை பிரதான வீதியின் தலல்ல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
முச்சக்கர வண்டியும் டிப்பர் வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் காயமடைந்த 33 வயதான முச்சக்கரவண்டி சாரதி, 15 வயது சிறுவன், 14 வயது சிறுமி மற்றும் 11 மாத குழந்தை ஆகியோர் சிகிச்சைக்காக மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குழந்தையின் நிலை கவலைக்கிடம்
விபத்தில் கொட்டகொட பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடைய பெண்ணே உயிரிழந்தார்.

விபத்தின் போது முச்சக்கரவண்டியில் ஐந்து பேர் பயணித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் காயமடைந்த குழந்தையின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 48 நிமிடங்கள் முன்
'காதல் சொல்ல வந்தேன்' நடிகரின் தற்போதைய நிலை... வெளிநாட்டில் என்ன வேலை செய்றார்னு தெரியுமா? Manithan
முருகன் பிறந்த இடம் வடநாடா? கொந்தளித்த தமிழ் மக்கள்.. ஜூனியர் என்.டி.ஆர் படத்திற்கு எதிர்ப்பு.. Cineulagam