வைத்தியசாலையில் இடம்பெற்ற மரணங்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம் - செய்திகளின் தொகுப்பு
குருணாகல் போதனா வைத்தியசாலையில் ஏற்பட்ட சந்தேகத்திற்கிடமான மரணங்கள் இடம்பெற்றமை தொடர்பில் ஆராய சுகாதார அமைச்சு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன் குழுவொன்றையும் நியமித்துள்ளது.
இது குறித்து பேசிய சுகாதார அமைச்சின் செயலாளர் பாலித மஹிபால, ஜனவரி மாதம் முதல் டயாலிசிஸ் பிரிவில் குறைந்தது ஐந்து மரணங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதன்படி, இது தொடர்பில் ஆராய்வதற்காக பிரதம தொற்று நோய் நிபுணர் சமித்த கினிகே தலைமையில் ஐவர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
ஆதாரங்களின்படி, அடையாளம் தெரியாத சில நோய்க்கிருமிகள் இரத்த டயாலிசிஸ் பிரிவுக்குள் நுழைந்ததால் இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.இருப்பினும், இறப்புக்கான உண்மையான காரணத்தைக் கண்டறிய சுகாதார அமைச்சகம் முழு சூழ்நிலையையும் ஆராய்ந்து வருகிறது என்று மஹிபால குறிப்பிட்டுள்ளார்.
இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான மதிய நேர செய்திகளின் தொகுப்பு..
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நிலா வீட்டைவிட்டு சென்றதால் சோழன் எடுத்த அதிரடி முடிவு, ஷாக்கில் குடும்பத்தினர்... அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam