சுதந்திர தின நிகழ்வில் தேசிய கீதம் பாடுவதற்கு மட்டும் ஒரு கோடி ரூபா செலவு! வெளியான தகவல்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் எதிர்வரும் 4ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ள 75ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வில் தேசிய கீதம் பாடுவதற்கு மாத்திரம் ஒரு கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
சுதந்திர தினக் கொண்டாட்டம் தொடர்பான கூட்டம், இதை ஏற்பாடு செய்யும் உள்நாட்டலுவல்கள் அமைச்சில் இடம்பெற்றது.
சுதந்திர தின நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அனைவரும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.
கலாசார நிகழ்வுக்கு ஒரு கோடி 50இலட்சம் ரூபா, தெற்கில் இருந்து வடக்கு வரையான சைக்கிள் சவாரிக்கு 2 கோடி ரூபா, சுதந்திர தினத்தைக் கண்டு கழிப்பதற்காக தெற்காசிய நாடுகளில் இருந்து வருகை தரும் அந்நாட்டுத் தலைவர்கள், அதிதிகள் உள்ளிட்டவர்களின் தங்குமிடம் உள்ளிட்ட செலவுக்காக ஒரு கோடி 90 இலட்சம் ரூபா செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது என்று நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

மத்திய வங்கியின் தீர்மானம்
இந்தக் கொண்டாட்டத்தையொட்டி ஆயிரம் ரூபா நாணயத்தாள்கள் ஆயிரம் வெளியிடுவதற்கு மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.
இதற்காக அவர்கள் கேட்டிருக்கும் செலவு 2 கோடி 20 இலட்சம் ரூபாவாகும்.
கொண்டாட்டத்தைப் பார்வையிடுவதற்காக வருபவர்கள் தற்காலிகமாகத் தங்குவதற்காக அமைக்கப்படும் கூடாரங்களுக்கான செலவு 4 கோடி ரூபா.

தேசிய கீதம் பாடுவதற்கான செலவு
அன்றைய தினம் தேசிய கீதம் பாடுவதற்கான செலவு ஒரு கோடி ரூபா. தேசிய கீதம் பாடும் சிறுவர்களின் பயிற்சி, ஆடை அலங்காரம், வாகன ஏற்பாடு உணவு உள்ளிட்ட விடயங்கள் இதற்குள் அடங்குகின்றன.
தேசிய கீதம் பாடுவதற்காகக் கொழும்பு பாடசாலைகளில் இருந்து 115 மாணவர்கள்
கலந்துகொள்ளவுள்ளனர்.
இலங்கையின் முதலாவது பிரதமர் டி.எஸ். சேனநாயக்கவின் உருவச் சிலைக்குப்
போடப்படும் மாலைகளுக்கான செலவு 97500 ரூபாவாகும் என தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
புதிய அரசியல் யாப்பு என்ற மாயைக்குள் அமிழ்ந்து போகும் தமிழ் அரசியல்! 19 மணி நேரம் முன்
புதிய கம்பெனிக்கு பார்ட்னர் ஆன நிலா, ரூ. 5 லட்சம் ரெடியானதா, ஹேப்பி எபிசோட்... அய்யனார் துணை சீரியல் Cineulagam
ஈரான் போரில் அதிரடி திருப்பம்... ஹார்முஸ் பகுதியில் 5,000 கடற்படை வீரர்களைக் களமிறக்கும் ட்ரம்ப் News Lankasri