“ஒரே நாடு ஒரே சட்டம்” செயலணியில் ஞானசார தேரர் முன்னிலையில் கருத்துக்களை தெரிவிக்க அவசியமில்லை?
“ஒரே நாடு ஒரே சட்டம்” ஜனாதிபதி செயலணியில் முஸ்லிம் மக்கள் தமது கருத்துக்களை முன்வைக்கவேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கலகொட அத்தே ஞானசார தேரரின் தலைமையிலான “ஒரே நாடு ஒரே சட்டம்” செயலணியில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் உறுப்பினர் ஒருவர் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.
ஒரே நாடு ஒரே சட்டம் செயலணியின் ஊடாக முஸ்லிம்களின் தனியார் சட்டங்கள் ரத்துச்செய்யப்படும் என்று ஊகங்கள் எழுப்பப்பட்டுள்ளன.
எனினும் அவ்வாறான ஊகங்களில் எவ்வித உண்மையுமில்லை என்று செயலணியின் உறுப்பினரான கலிலுல் ரஹ்மான் குறிப்பிட்டுள்ளார்.
எனவே முஸ்லிம்களின் உரிமைகளை தொடர்ந்தும் தக்கவைத்துக்கொள்ளும் வகையில் முஸ்லிம் பொது அமைப்புக்கள் மற்றும் புத்திஜீவிகள் தமது கருத்துக்களை செயலணியில் முன்வைக்கவேண்டும் என்று அவர் கேட்டுள்ளார்
இந்த செயலணி, ஜனாதிபதி செயலணியே தவிர கலகொட அத்தே ஞானசாரரின் செயலணி அல்ல.
இதனடிப்படையில், முன்னதாக கலகொட அத்தே ஞானசார தேரரின் தலைமையிலான உறுப்பினர்களிடம் தமது கருத்துக்களை தெரிவிக்க விரும்பாத சில முஸ்லிம் தரப்புக்கள், செயலணியின் செயலாளர் உட்பட்ட உறுப்பினர்கள் மத்தியில் தமது கருத்துக்களை முன்வைப்பதற்கு ஞானசார தேரர் இடமளித்தார்.
இது, செயலணியில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் உறுப்பினர்களின் கோரிக்கையின் பேரில் மேற்கொள்ளப்பட்டதாகவும் கலீலுல் ரஹ்மான் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இயங்கும் இந்த செயலணியில் தமது கருத்துக்களை முஸ்லிம் தரப்புக்கள் 0112691775 என்ற தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புக்கொண்டு தெரிவிக்கமுடியும் என்றும் கலீலுல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.





தப்பிக்கும் போது குணசேகரனிடம் வசமாக சிக்கிய சக்தி, தர்ஷன், பின் நடந்த பரபரப்பு சம்பவம்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
