“ஒரே நாடு ஒரே சட்டம்” தாம் அதிர்ச்சியடைந்துள்ளதாக அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா அறிவிப்பு
“ஒரே நாடு ஒரே சட்டம்“ என்ற ஜனாதிபதி செயலணி அமைக்கப்பட்டிருப்பதை அறிந்து தாம், அதிர்ச்சியடைந்துள்ளதாக அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா தொிவித்துள்ளது.
இலங்கையில் வாழக்கூடிய சகல குடிமக்களும் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் யாப்பிற்கு அமைய, ஒரே நாடு ஒரே மக்கள் என்ற அமைப்பில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
இந்தநிலையில் மத நிந்தனைகளில் ஈடுபட்டு முஸ்லிம்களின் மத உணர்வுகளை புண்படுத்திக் கொண்டிருக்கும் சர்ச்சைக்குரிய ஒருவர் செயலணிக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ளமை அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக உலமா சபை குறிப்பிட்டுள்ளது.
இந்த செயற்பாடு காரணமாக முஸ்லிம்கள் பல வழிகளில் பாதிக்கப்படுவார்கள் என்ற அச்சம் முஸ்லிம்களுக்கு மத்தியில் எழுந்துள்ளது.
அத்துடன் இந்த நியமனம் சர்வதேச மட்டத்தில் இலங்கைக்கு அகௌரவத்தைக் கொண்டு
வரும் என்றும் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் பொதுச்செயலாளா் அஷ்ஷைக் எம்.
அர்கம் நூராமித் தெரிவித்துள்ளாா்.
பிக்பாஸ் 10 வீட்டில் இருந்து வெளியேறிய லட்சுமி ப்ரியா - இன்ஸ்டா ஸ்டோரியில் போட்ட பதிவு வைரல்! Manithan
பிரித்தானியாவில் 181 மில்லியன் பவுண்டுகள் அலைபேசி கொள்ளைச் சம்பவம்: சிக்கிய புகலிடக் கோரிக்கையாளர் News Lankasri
பிரித்தானியாவில் ஒரு அதிர்ஷ்டசாலி: யூரோமில்லியன்ஸ் லொட்டரியில் £111 மில்லியன் வென்று சாதனை News Lankasri