இயக்கச்சி பகுதியில் கட்டுமாண பணியில் ஈடுப்பட்ட ஒருவர் பலி
பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இயக்கச்சி முகாவில் பகுதியில் கோயில் கட்டுமாண பணியில் இருந்த பணியாளர் ஒருவர் பலியாகிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
குறித்த சம்பவமானது பளை இயக்கச்சி முகாவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
கட்டிட இடிபாட்டுக்குள் விழுந்த பணியாளர்

கோயில் கட்டிட வேலை ஒன்றில் கொங்கிரீட் போடும் வேலை இடம்பெற்று கொண்டிருந்த போது முட்டுக்கொடுக்கப்பட்டிருந்த மரங்கள் விழுந்தமையால் கொங்கிரீட் சரிந்து கட்டிடம் வீழ்ந்தமையால் பணியாளர் கட்டிட இடிபாட்டுக்குள் விழுந்துள்ளார்.
இந்நிலையில் அவரை பளை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற வேளை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.
சம்பவத்தில் இறந்தவர் தவபாலன் சதீசன் வயது (27) யாழ்ப்பாணம் சுழிபுரத்தை சேர்ந்தவர் எனவும் தெரியவருகின்றது.
பொலிஸார் விசாரணை

மற்றுமொருவர் காயமடைந்த நிலையில் பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாக பளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 7 மணி நேரம் முன்
விரைவில் முடிவுக்கு வரும் பூங்காற்று திரும்புமா சீரியலின் கிளைமேக்ஸ் காட்சியின் போட்டோஸ்... Cineulagam
கடை திறப்பு விழா முடிந்தது, அடுத்து தர்ஷன் கிளப்பிய பிரச்சனை, குணசேகரன் அடுத்த பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri