ஏற்கனவே கோவிட் தொற்றுக்குள்ளானவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
ஒருவர் பல முறை கோவிட் தொற்றுக்கு உள்ளாகும் வாய்ப்புக்கள் உள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஒரு மாதத்திற்குள்ளான காலப்பகுதியில் ஏற்கனவே தொற்று உறுதியான நபருக்கு மீண்டும் கோவிட் தொற்று உறுதியாகலாம் என பொது சுகாதார பரிசோகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.
கோவிட் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், இதுவரை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் இருந்தால் உனடியாக அதனை பெறுவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு அவர் கோரினார்.
அத்துடன் சுகாதார வழிகாட்டுதல்களையும் உரிய வகையில் பின்பற்ற வேண்டியது அவசியமாகும்.
இதேவேளை, இதுவரை நான்காம் தடுப்பூசியினை செலுத்துவது தொடர்பான எந்தவொரு சுற்றுநிருபமோ, அறிவுறுத்தல்களோ வெளியிடப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.





தமிழ் இன அழிப்பை கட்டமைத்துள்ள இலங்கை அரசாங்கம் 11 மணி நேரம் முன்

இந்தியாவை 100 ஆண்டுகளுக்கு மேல் ஆண்ட கிழக்கிந்திய கம்பெனி - இப்போது உரிமையாளரான இந்தியர் News Lankasri

ராஜியை சிக்கலில் மாட்டிவிடும் சக்திவேல்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
