மரக்குற்றிகளுடன் ஒருவர் கைது: மற்றுமொருவர் தப்பியோட்டம்
திருகோணமலை-மஹதிவுல்வெவ குளத்துக்கு அருகில் இன்று மரக்குற்றிகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில் மற்றுமொருவர் தப்பியோடியுள்ளதாக மொரவெவ பொலிஸார் தெரிவித்தனர்.
மஹதிவுல்வெவ குளத்துக்கு அருகில் உள்ள காட்டுப் பகுதியில் விலைகூடிய மரங்களை வெட்டி தோணியில் கொண்டு செல்லும்போது பொலிஸாருக்கு வழங்கப்பட்ட இரகசிய தகவலை அடுத்து அங்கு விரைந்த பொலிசார் மரக்குற்றிகளுடன் ஒருவரைக் கைது செய்துள்ளதுடன் மற்றுமொறுவர் தப்பியோடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் கிண்ணியா பகுதியைச் சேர்ந்த ரொட்டவெவ கிராமத்தில் வசித்து வரும் முஹம்மது காசிம் முகம்மது றிஸ்வி (40 வயது) எனவும் பொலிசார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ள நிலையில் தப்பியோடிய சந்தேக நபரை கைது செய்ய உள்ளதாகவும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் மொரவெவ பொலிஸார் தெரிவித்தனர்.








பாக்கியலட்சுமி, தங்கமகள் சீரியலை தொடர்ந்து முடிவுக்கு வரும் மற்றொரு சீரியல்... எந்த தொடர் தெரியுமா? Cineulagam

என் குழந்தைகளுக்கு தந்தை இல்லாமல் இருக்கலாம்... 40 வயதில் கர்ப்பமான நடிகை! வைரலாகும் நெகிழ்சி பதிவு Manithan

சுனாமி அலைகளுக்கு மத்தியில் கப்பலுக்கு ஓடிய மக்கள்: பெண் சுற்றுலா பயணி பகிர்ந்த திக் திக் நிமிடங்கள்! News Lankasri

10 திருமணம், 350 துணைவியர்..! மனைவிகளுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை: யார் இந்த இந்திய மன்னர்? News Lankasri
