மட்டக்களப்பில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது (Photo)
மட்டக்களப்பு, வாழைச்சேனையில் பொலிஸ் பிரிவிலுள்ள ஓட்டுமாவடியில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வாழசைசேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள ஓட்டுமாவடி இராணுவ புலனாய்வு பிரிவினரால் குறித்த நபர் இவ்வாறு கைது செய்யப்பட்டு நேற்று (04) பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவல் ஒன்றிற்கமைய சம்பவதினமான நேற்று இரவு ஓட்டுமாவடி பகுதிக்கு கேரள கஞ்சாவை எடுத்து வந்த கஞ்சா வியாபாரியை இராணுவ புலனாய்வு பிரினர் பொலிஸாருடன் இணைந்து கைது செய்ததுடன் அவரிடமிருந்து 595 கிராம் கேரள கஞ்சாவை மீட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் வாழைச்சேனை பாருக் நானா வீதியைச் சேர்ந்த 34 வயதுடையவர் எனவும் இவர் நீண்டகாலமாக கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டுவந்தவர் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
| மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |
கனடா, கிரீன்லாந்தை இணைத்து ட்ரம்ப் வெளியிட்ட புதிய அமெரிக்க வரைபடம் - உலகளவில் சர்ச்சை News Lankasri
குடும்பம் முழுவதையும் இழந்த இலங்கையருக்கு கனடா தரப்பிலிருந்து ஒரு ஆறுதலளிக்கும் செய்தி News Lankasri