பெருந்தொகையான டொலர்களோடு வசமாக சிக்கிய நபர்!
50,000 அமெரிக்க டொலர்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் 36 வயதுடைய நபரொருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
ராஜகிரிய வெலிக்கடை பகுதியில்,மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சட்டவிரோத உண்டியல் மற்றும் ஹவாலா பணப்பரிமாற்ற முறைகளில் ஈடுபடும் நபர்களை கைது செய்ய குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
கடந்த வாரம், இலங்கை மத்திய வங்கி, இலங்கையர் ஒருவர் வைத்திருக்கும் அனுமதிக்கப்பட்ட வெளிநாட்டு நாணயத்தின் சட்ட வரம்பு குறித்த ஏற்பாடுகள் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவித்தது.
அந்த வகையில், இலங்கையில் வசிப்பவர் தம்மிடம் வைத்திருக்கக்கூடிய வெளிநாட்டு நாணயத்தின் சட்ட வரம்பானது 15,000 அமெரிக்க டொலர்களில் இருந்து 10,000 அமெரிக்க டொலர்களாக குறைக்கப்படுவதற்கான ஏற்பாடுகள் அறிமுகப்படுத்தப்படலாம் என மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.






அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 11 மணி நேரம் முன்

புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்த வேடிக்கை செயல்: கமெராவில் சிக்கிய காட்சி News Lankasri

தமிழகத்தில் டாப் டக்கர் வசூல் வேட்டை செய்துள்ள சிவகார்த்திகேயனின் மதராஸி.. மொத்த வசூல் விவரம் Cineulagam
