கேரள கஞ்சாவுடன் ஒருவர் பொலிஸ் விசேட புலனாய்வுப் பிரிவினரால் கைது (Photos)
கற்பிட்டி பொலிஸ் விசேட புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய கற்பிட்டி பொலிஸாருடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சுற்றிவளைப்பு அல்மனார் பகுதியில் இன்று (23.08.2023) மேற்கொள்ளப்பட்டதாக கற்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
மேலதிக நடவடிக்கை
இதன்போது, 2 கிலோ கிராம் கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதுடன் கற்பிட்டி பகுதியைச் சேர்ந்த ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரையும் கைப்பற்றப்பட்ட கேரளா கஞ்சாவையும் மேலதிக
நடவடிக்கைகளுக்காக புத்தளம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகளை
முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபரிடம் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு
வருவதாக கற்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.