சட்டவிரோத பொருத்து வாகனங்கள் விற்பனை : மாத்தளையில் ஒருவர் கைது
வாகன உதிரிப்பாகங்களை பொருத்தி, சட்டவிரோதமான முறையில் வாகனங்களை உருவாக்கி விற்பனை செய்து வந்த குற்றச்சாட்டின் கீழ் மாத்தளையில் (Matale) ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் வசம் இருந்து பொருத்தப்பட்ட 08 வாகனங்கள் கண்டுபிடிக்கப்பட்டதுடன், இலக்கத்தகடு பொருத்தப்பட்ட அந்த வாகனங்களின் சட்டக எண்கள் (செசி இலக்கம்) மாற்றப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
அவற்றுள் 06 வாகனங்கள் பயன்படுத்தக்கூடியதாகவும் இரண்டு வாகனங்கள் பழுதடைந்த நிலையில் காணப்பட்டுள்ளன.
நீதிமன்றில் முன்னிலை
சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, பிலியந்தலை பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மற்றுமொரு வாகனம் தொடர்பான தகவல் தெரியவந்துள்ளதுடன், அதன் சேசி இலக்கம் மற்றும் என்ஜின் அனைத்தும் மாற்றப்பட்டுள்ளமையும் தெரியவந்துள்ளது.
இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட வாகனங்களின் பெறுமதி 05 கோடி ரூபாவுக்கும் அதிகம் எனக் கூறப்படுகிறது.
சந்தேகநபர் மஹர நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து ஜனவரி 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |