வவுணதீவு பகுதியில் பொலிஸாரால் ஒருவர் கைது
மட்டக்களப்பு, மண்முனை மேற்கு பிரதேசத்தின் வவுணதீவு பொலிஸ் பிரிவில் அனுமதிப்பத்திர நிபந்தனையினை மீறி மண் அகழ்வில் ஈடுபட்ட நபர் ஒருவர் வாகனத்துடன் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுணதீவு பொலிஸார் இன்று தெரிவித்துள்ளனர்.
வவுணதீவு பொலிஸ் நிலையப்பதில் பொறுப்பதிகாரி ஜீ.எஸ்.பிரியங்கரவின் ஆலோசனைக்கமைவாக, விஷேட பொலிஸ் புலனாய்வு பிரிவினர் மேற்கொண்ட நடவடிக்கையின் போது கன்னங்குடா பகுதியில் வைத்து மேற்படி வாகனத்துடன் நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
மண்ணுடன் கைப்பற்றப்பட்ட வாகனத்தையும்,கைது செய்யப்பட்ட நபரையும்
சட்ட நடவடிக்கையின் பொருட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை
மேற்கொள்ளப்பட்டு வருவதாக வவுணதீவு பொலிஸ் பதில் பொறுப்பதிகாரி ஜீ.எஸ்.
பிரியங்கர தெரிவித்துள்ளார்.

பாக்., சீனாவுக்கு கவலையளிக்கும் செய்தி - Tejas MK1 போர் விமானங்களை மேம்படுத்தும் இந்தியா News Lankasri
