இராணுவ புலனாய்வு பிரிவினரின் சுற்றிவளைப்பில் ஒருவர் கைது
இராணுவ புலனாய்வு பிரிவினரின் சுற்றிவளைப்பில் பெருமளவான போதை மாத்திரைகளுடன் மல்லாகத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று இரவு இராணுவ புலனாய்வுப் பிரிவினரின் விசேட சுற்றிவளைப்பில், பெருமளவான போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சாவகச்சேரி பகுதியை சேர்ந்த குறித்த சந்தேகநபர் திருமணம் முடித்து மல்லாகம் பகுதியில் வசித்துவந்துள்ளார்.
இந்நிலையில் மல்லாகத்தில் உள்ள வீடு ஒன்றில் வைத்து 265 போதை மாத்திரைகளுடன், இராணுவ புலனாய்வு பிரிவினர் அவரை கைது செய்து தெல்லிப்பழை பொலிஸாரிடம் கையளித்தனர்.
மேலதிக விசாரணைகளின் பின்னர் அவரை நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, யாழ்.பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஸ்டான்லி வீதி
பகுதியில் வைத்து 22 கிராம் கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
திரிஷா பற்றிய முக்கிய ரகசியத்தை போட்டுடைத்த விஷ்ணு விஷால்! கோபப்பட மாட்டார் என நம்புறேன்.. Cineulagam
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam