கனடாவில் இருந்து நாடுகடத்தப்பட்ட ஒருவர் அதிநவீன ஆயுதங்களுடன் கைது
கனடாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட ஒருவர் உள்ளிட்ட இருவர் அதிநவீன ஆயுதங்களம் மற்றும் பெருந்தொகை பணத்துடன் கண்டியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 44 வயதான அமெரிக்க கடற்படை முன்னாள் அதிகாரி ஒருவரும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கண்டி - திகனவில் அமைந்துள்ள Victoria Range Bungalow இல் தெல்தெனிய பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த Bungalow இல் அதிக சக்தி வாய்ந்த மோட்டார் சைக்கிள்கள் பொருத்தப்படுவதாக கிடைத்த இரகசிய தகவலின் பேரில் இந்த சோதனை நடத்தப்பட்டது.
இதன்போது 100 தோட்டாக்கள், ரம்போ கத்தி, தொலைநோக்கி, ஏர் ரைபிள் போன்ற துப்பாக்கி, நான்கு மினி வாக்கி டாக்கிகள், 2 பதிவு செய்யப்படாத மோட்டார் சைக்கிள்கள், 4 பதிவு செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்கள், இரண்டு கையடக்க தொலைபேசிகள், அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்ட இலக்கத்தகடு, கடவுச்சீட்டு என்பன மீக்கப்பட்டுள்ளன.
அத்துடன், ஏழு லட்சம் ரூபா பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சந்தேக நபர்களில் ஒருவர் 2004 முதல் ஜனவரி 2021 வரை அமெரிக்க கடற்படையின் 143வது படைப்பிரிவில் பணியாற்றிய 44 வயதான இலங்கை இரட்டை பிரஜை பெற்றவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மற்றைய சந்தேக நபர் குற்றவியல் குற்றச்சாட்டின் கீழ் கனடாவில் இருந்து நாடு கடத்தப்பட்டவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் இருவரும் தெல்தெனிய மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் நவம்பர் மாதம் 15ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.