வவுனியாவில் சந்தேகநபர் ஒருவர் கைது
வவுனியா (Vavuniya) - பூவரசன்குளம் பகுதியில் இடம்பெற்ற இரு வேறு திருட்டுச் சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையானது இன்று (11) குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வவுனியா, பூவரசன்குளம் பகுதியில் கடந்த மாதம் வீடு ஒன்றில் இருந்து கைதொலைபேசி ஒன்றும் பிறிதொரு வீட்டில் இருந்து மோட்டர் சைக்கிள் ஒன்றும் திருடப்பட்டிருந்தது.
மேலதிக விசாரணை
குறித்த சம்பவம் தொடர்பில் பூவரசன்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்த நிலையில், அதற்கு மேலதிகமாக வவுனியா மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் ஆலோசனைக்கு அமைவாக வவுனியா மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி அழகியவண்ண தலைமையிலான பொலிஸாரும் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் முருங்கன் பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது திருட்ப்பட்ட மோட்டர் சைக்கிள் மற்றும் கைத்தொலைபேசி என்பன மீட்கப்பட்டுள்ளன.
மேலதிக விசாரணைகளின் பின் குறித்த நபரை நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாகவும் மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |