டுபாயிலிருந்து வந்த இலங்கையர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது
சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 69 வெளிநாட்டு மதுபான போத்தல்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால், இன்று (13) காலை இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கட்டுநாயக்க விமான நிலைய முனையத்தில் சோதனை
சந்தேகநபர் இன்று (13) அதிகாலை 12.30 மணிக்கு எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் EK - 648 மூலம் டுபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்துள்ளார்.

இதன்போது கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளுக்கமைய, கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் மினுவங்கொடை பகுதியைச் சேர்ந்த 28 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
நீதிமன்றத்தில் முன்னிலை
மேலும் சந்தேகநபர் மற்றும் அவர் சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வந்த விமதுபான போத்தல்களுடன் (12/15 ) திகதி நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்படவுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க விமானநிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மேற்கொண்டு வருகிறது.