யாழில் மூச்சுத்திணறல் காரணமாக ஒன்றரை வயது குழந்தை பலி
திடீர் மூச்சுத்திணறல் காரணமாக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஒன்றரை வயதுக்குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.
புங்குடுதீவு 12ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த அருள்டயஸ் கிவின்சலா என்ற பெண் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நேற்று மாலை குழந்தைக்கு திடீர் மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.உடனடியாக புங்குடுதீவு பிரதேச மருத்துவமனையில் குழந்தை சேர்க்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது.
எனினும் சிகிச்சை பலனின்றி இரவு 9 மணிக்கு குழந்தை உயிரிழந்துவிட்டதாக மருத்துவ அறிக்கையிடப்பட்டது.
குழந்தையின் மாதிரிகள் பெறப்பட்டு முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் கோவிட்-19 தொற்று இல்லை என அறிக்கையிடப்பட்டது.
இறப்பு விசாரணையை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 9 மணி நேரம் முன்
முருகன் பிறந்த இடம் வடநாடா? கொந்தளித்த தமிழ் மக்கள்.. ஜூனியர் என்.டி.ஆர் படத்திற்கு எதிர்ப்பு.. Cineulagam
புகலிடக்கோரிக்கையாளர்கள் 10,000 பவுண்டுகள் செலுத்தவேண்டும்... அறிமுகமாகும் புதிய சட்டம் News Lankasri