சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்களின் பரிதாப நிலை : ஏக்கத்தில் உறவினர்கள்
சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்கள் மகிந்தானந்த அளுத்கமகே மற்றும் நளின் பெர்னாண்டோ ஆகியோரை அவர்களது குடும்ப உறுப்பினர்கள் அல்லது நண்பர்கள் மாதத்திற்கு ஒரு முறை மட்டுமே பார்க்க அனுமதிக்கப்படுவார்கள் என சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அவர்களுக்கு கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது அனைத்து கைதிகளுக்கும் பொருந்தும் விதியாகும் என சிறைச்சாலை ஆணையாளர் காமினி திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
மூன்று பேருக்கு வாய்ப்பு
வழக்கமாக ஒரே நேரத்தில் மூன்று பேருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.

முன்னாள் அமைச்சர்கள் இருவரும் ஒரே பொதுவான பகுதியில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இருவரும் இன்று சிறைச்சாலைப் பணிக்கு நியமிக்கப்படுவார்கள் என்று வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
You May Like This Video
சக்திக்கு வந்த ஷாக்கிங் தகவல், விசாலாட்சியை சுட துணிந்த கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
12 ஆண்டுகளுக்கு முன் கோமாவிற்கு சென்ற உலக சாம்பியன் ஷூமேக்கர் - உடல் நிலையில் முன்னேற்றம் News Lankasri