இரண்டாவது நாள் ஏழு ஜனாஸாக்கள் நல்லடக்கம்
கோவிட்-19 வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்யலாம் என்ற சுகாதார அமைச்சின் சுற்று நிரூபத்துக்கமைய இன்று இரண்டாவது நாள் ஏழு ஜனாஸாக்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளன.
ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மஜ்மா நகரில் கோவிட்-19 தொற்று மூலம் மரணித்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்குச் சிபாரிசு வழங்கப்பட்டுள்ள நிலையில், ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை ஆகிய இரு தினங்களில் மாத்திரம் கோவிட்டினால் மரணித்தவர்களின் பதினாறு ஜனாஸாக்கள் அடக்கம் செய்யப்பட்டதாகச் சுகாதார திணைக்களத்தினர் தெரிவித்துள்ளனர்.
கோவிட்-19 தொற்று மூலம் மரணித்த ஜனாஸாக்களில் நேற்று கிழக்கு மாகாணத்தினை சேர்ந்த ஒன்பது ஜனாஸாக்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளதுடன், இன்று நிட்டம்புவ பிரதேசத்தினை சேர்ந்த ஐந்து ஜனாசாக்களும், நாரங்கொடயை சேர்ந்த ஒருவர் மற்றும் கொழும்பைச் சேர்ந்த ஒருவருமான ஏழு ஜனாசாக்கள் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளன.
கோவிட்-19 தொற்று மூலம் மரணித்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யும் பிரதேசம் தொடர்ந்தும் இராணுவத்தினரின் பாதுகாப்பில் உள்ளதுடன், ஊடகவியலாளர்கள் செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.










பெண்கள் பதிலடி கொடுத்தும் அடங்காத குணசேகரன், தர்ஷனுக்கு வைத்த செக்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam

Jurassic World Rebirth 13 நாட்களில் இத்தனை ஆயிரம் கோடிகள் வசூலா, இதை அழிக்கவே முடியாது போல Cineulagam
